து குடித்து விட்டு கள்ளக் காதலனுடன் உல்லாசம். தட்டிக் கேட்ட கணவன் படுகொலை. கள்ளக் காதலனுடன் மனைவி கைது. கள்ளக் காதலுக்கு இடைஞ்ச லாக இருந்த கணவனை, கூலிப் படையை ஏவி கொலைசெய்த மனைவி கைது. கள்ளக் காதல் வெறி, குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குன்றத்தூர் அபிராமி கைது. காலையில் பேப்பரைத் திறந்தால் இப்படிப்பட்ட கண்றாவிச் செய்திகள் தினசரி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

Advertisment

athithimenon

ஆனால், சினிமா உலகில் அதுவும் கோடம்பாக்கத்தில் ஒரு கள்ளக் காதல் அசிங்கம் அரங்கேறி நாறிக்கிடக்கிறது. மியூஸிக் டைரக்டர் எஸ்.எஸ். குமரன் டைரக்ட் பண்ணிய "கேரள நாட்டிளம் பெண்களுடனே' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அபி சரவணன். அதன்பின் ஹீரோ கேரக்டர் கிடைக்கவில்லை என்றாலும், கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித் தார் அபி சரவணன். சமூக சேவையில் ஆர்வமுள்ள அபி சரவணன், கொஞ்சம் வசதியான பார்ட்டியும்கூட.

"பட்டதாரி' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கேரளா வைச் சேர்ந்த அதிதி மேனன். அடுத்ததாக அறிமுக இயக்குநர் செல்வகண்ணனும், அவருடன் பாலிடெக்னிக் கில் படித்த நண்பர்கள் 50 பேரும் இணைந்து தயாரித்த "நெடுநல்வாடை' படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனார் அதிதி. ஷூட்டிங் ஆரம்பித்து பத்து நாட்களில் சேட்டையை ஆரம்பித்தார் அதிதி. நடிகர் அபி சரவணனை காதலிக்க ஆரம்பித்த (ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்காட்டாலும், பசைப் பார்ட்டியாச்சே அபி) அதிதி, டைரக்டர் செல்வகண்ணன், தன்னை படுக்கக் கூப்பிட்டதாக பகீர் கிளப்பினார்.

Advertisment

தயாரிப்பு தரப்பிலிருந்து சமாதானம் பேசியதும் மீண்டும் நடிக்க வந்தவர், மீண்டும் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்தார். ச்சேச்சே. இது வேலைக்கு ஆகாது என முடிவுக்கு வந்த செல்வகண்ணன், அதே கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி நாயர் என்பவரை இறக்குமதி செய்து ஹீரோயினாக அறிமுகப்படுத்தி படத்தையும் எடுத்து முடித்துவிட்டார். இதற்கிடையில் மறைந்த இயக்குநர்- தயாரிப்பாளர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் தயாரித்து டைரக்ட் பண்ணிய "களவாணி மாப்பிள்ளை'-யில் அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடி போட்டு நடித்து முடித்தார் அதிதி மேனன். ஆனா படமோ பப்படமாகிருச்சு.

athithimenon

சரி- இப்ப அதிதியின் கள்ளக் காதல் மேட்டருக்கு வருவோம். கைநிறைய காசிருக்கும் அபியை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் அதிதி. காதல் மனைவி கேட்டதையெல்லாம் ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்தார் அபி சரவணன். ஆஹா நமக்கு வாய்த்த புருஷன் செப்பு கலக்காத தங்கமனசுக்காரனா இருக்காரேன்னு புளங்காங்கிதப்பட்டார் அதிதி. இந்த நேரத்துலதான் மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதையா ஒருத்தன் வந்தான்.

அவன் பேரு சுஜித். இவனும் கேரள ஆசாமிதான்.

Advertisment

அபிக்குத் தெரியாமலேயே கள்ளக் காதலுக்கு சரக்கு ஊற்றி வளர்த்தார் அதிதி. ஏழைகளுக்கு உதவும் அறக் கட்டளை நடத்துவதால், அடிக்கடி வெளியூர்களுக்கு பயண மாவார் அபி சரவணன்.

அவர் வெளியூர் போவது கள்ளக் காதல் ஜோடிகளான அதிதிக்கும் சுஜித்துக்கும் ரொம்பவே வசதியாப் போச்சு. அவர் களின் காமமும் எல்லைமீறிப் போச்சு. சமீபத்தில் ஒரு வாரப் பயணமாக வெளியூர் கிளம்பினார் அபி.

""உனக்கு போரடிச்சா கேரளாவுல இருக்குற உங்க அம்மா- அப்பாவைப் பார்த்துட்டு வா.

இல்லேன்னா அவர்களை இங்கே வரச்சொல்லு. ஒரு வாரத்துல நான் வந்துருவேண்டா செல்லம்'' என செல்லமாக அதிதியைக் கொஞ்சிவிட்டுப் புறப்பட்டார் அபி.

athithimenon

சுஜித் இருக்க, அம்மா- அப்பா எதற்கு என யோசித்த அதிதி, சுஜித்தை தனது வீட்டிற்கு வரவழைத்து, முடிந்தமட்டிலும் கும்மியடித்துவிட்டு, ஆசைஆசையாய் அபி வாங்கிப்போட்ட அத்தனைப் பொருட்களையும் குப்பைக் கூடை மொதக்கொண்டு வாரிச் சுருட்டி எடுத்துக்கொண்டு, கள்ளக் காதலன் சுஜித்துடன் கம்பி நீட்டிவிட்டார் அதிதி மேனன்.

ஒரு வாரம் கழித்து சென்னை திரும்பிய அபி சரவணன், வீடு வெளிப்பக்கமாகப் பூட்டியிருப்பதைப் பார்த்து அதிதியின் செல்ஃபோனுக்கு ட்ரை பண்ணியபோது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப். பூட்டை உடைத்து உள்ளே போனால், வீட்டையே துடைச்சு எடுத்தது மாதிரி இருந்திருக்கு. அப்படியே நெஞ்சைப் பிடித்து உட்கார்ந்துவிட்டார் அபி சரவணன்.

நடிகரையோ, டைரக்டரையோ, தயாரிப்பாளரையோ திருமணம் செய்துகொள்ளும் நடிகைகள் ஈஸியாக டைவர்ஸ் பண்ணிவிட்டு, டாட்டா பைபை என கிளம்பிவிடுவார்கள். ஆனா இந்த அதிதி மேனன் செஞ்ச காரியத்தை எதில் சேர்ப்பது?

-ஈ.பா.பரமேஷ்வரன்